
உலகம் முழுவதும் சன்னி லியோனுக்கு பிறகு பிரபலமடைந்த பார்ன் நடிகையான மியா கலிஃபா, தன்னுடன் நடித்த சக நடிகரான ஸ்வீடனைச் சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க் என்பவரை சென்ற 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கரோனா ஊரடங்கு சமயத்தில் எளிமையான முறையில் வீட்டிலேயே திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தற்போது மியா கலிஃபா தனது கணவர் ராபர்ட் சாண்ட்பர்க்கை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து கூறியபோது...
"கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எங்களது திருமண உறவை தக்கவைத்துக்கொள்ள நாங்கள் போதுமான முயற்சிகள் எடுத்தும் அது பலனளிக்கவில்லை. அதனால், திருமண உறவை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம். நாங்கள் இருவரும் திருமண உறவில் இருந்து பிரிந்தாலும், எங்களது நட்பை தொடர முடிவு செய்துள்ளோம். விவாகரத்து பெறுபவர்களுக்கு வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக வாழ்த்து தெரிவியுங்கள்" என கூறியுள்ளார். முன்னதாக நடிகை மியா கலிஃபா, கடந்த 2011ஆம் ஆண்டு தனது பள்ளி காதலனைத் திருமணம் செய்துகொண்ட பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக 2016ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)