mia george

தமிழில் அமர காவியம் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். இதனை தொடர்ந்து வெற்றிவேல், இன்று நேற்று நாளை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது விக்ரம் உடன் கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார்.

Advertisment

தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டுதிரைதுறைகளிலும் பிஸியாக இருக்கும் மியாவுக்கு வீட்டில் திருமணம் முடிவு செய்துள்ளனர். கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்யவுள்ளார் மியா ஜார்ஜ். இருவருடைய நிச்சயதார்த்தம் மற்றும் திருமணதேதி இன்னும் முடிவாகவில்லை. இன்னும் மூன்று மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தற்போது உலகம் முழுக்க பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா பிரச்சனை முடிவடைந்த பிறகு பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இரு வீட்டாரும் அஸ்வின் பிலிப் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.