/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/89_13.jpg)
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எம்.ஜி.ஆர் மகன்'. இப்படத்தில்சசிகுமாருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆண்டனி தாசன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் பணிகள் முன்னரே நிறைவடைந்தும் கரோனா நெருக்கடி காரணமாக திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு இயல்புநிலை திரும்பிவருவதால் 'எம்.ஜி.ஆர் மகன்' படத்தினை திரைக்குக் கொண்டுவர படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இது குறித்தான அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, 'எம்.ஜி.ஆர் மகன்' திரைப்படம் ஏப்ரல் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள, 'ராஜவம்சம்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், 'எம்.ஜி.ஆர் மகன்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது, சசிகுமார் ரசிகர்களைக் கூடுதல் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)