“எதிரியா இருந்தாலும் மதிக்கணும்”- எம்.ஜி.ஆர்- கலைஞர் குறித்து விஜய் சிலாகிப்பு

விஜய் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகப்பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நயன்தாராவை தவிர மற்ற அனைவரும் கலந்துகொண்டனர்.

bigil

விஜய்யை வைத்து அடுத்து படம் இயக்கப்போகும் லோகேஷ் கனகராஜும் இவ்விழாவில் கலந்துகொண்டார். மேடை ஏறிய பிரபலங்கள் அனைவரும் நடிகர் விஜய்யை குறித்தும், அவர் செட்டில் எப்படி நடந்துகொள்வார் என்பதையும் சிலிர்த்து பேசி சென்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசை கச்சேரியும் நடைபெற்றது. விஜய்யும் தான் பேச ஆரம்பிக்கும் முன்பாக வெறித்தனம் பாடலை பாடி ஜாலியாக துவங்கினார். இதன்பின் சமூக வலைதளங்களில் சண்டைபோட்டுக்கொள்ளும் ரசிகர்களுக்காக அட்வைஸ் கொடுத்தார். அப்போது பேசியவர் எம்.ஜி.ஆர்-கலைஞர் நட்பு குறித்து பேசினார்.

super duper

அதில், “எம்.ஜி.ஆர் ஒருமுறை காரில் போகும்போது அவருடன் வந்தவர், கலைஞர் குறித்து கேலியாக பேசியுள்ளார். அப்போது கலைஞருக்கும் எனக்கும் 1000 இருக்கும் ஆனால் அவரை தரைக்குறைவா பேசக்கூடாது என்று எம்.ஜி.ஆர் கூறினாராம். எதிரியாக இருந்தாலும் மதிக்கணும். இதுக்கு ரியாக்ட் பண்றது விட்டுட்டு சமூக பிரச்சனைல கவனம் செலுத்தலாம்” என்று ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்தார்.

actor vijay bigil
இதையும் படியுங்கள்
Subscribe