Metti Oli Serial actress Uma Maheshwari passes away 

Advertisment

2002ஆம் ஆண்டு துவங்கி 2005ஆம் ஆண்டுவரை, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுப் பெண்களை டி.வி.க்கு முன் அமரவைத்த தொடர் ‘மெட்டி ஒலி’. முதல் தவணை முடிந்து தற்போது இரண்டாம் தவணையாக மறுஒளிபரப்பு செய்யப்பட்டுவருகிறது. இத்தொடர்.

திருமுருகன் இயக்கத்தில் உருவான இந்தத் தொடரில் டெல்லி குமார், திருமுருகன், காவேரி, காயத்ரி, போஸ் வெங்கட், சஞ்சீவி, உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் தொடரில் நடித்திருந்தவர் உமா மகேஸ்வரி.

இந்தத் தொடரின் வெற்றிக்குப் பிறகு 'வெற்றிக் கொடி கட்டு', 'உன்னை நினைத்து', 'அல்லி அர்ஜுனா' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தார். அதேபோல், மேலும் சில தொடர்களிலும் அவர் நடித்திருந்தார்.

Advertisment

இவர் சில மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். அதற்குச் சிகிச்சை எடுத்து குணமானார். பின்பு மீண்டும் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. இதற்குச் சிகிச்சை எடுத்துவந்தார். இந்நிலையில், நேற்று (அக்டோபர் 17) காலை திடீரென்று மரணமடைந்தார். உமாவின் மறைவு சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.