Advertisment

கரண் அண்ணா இடத்தில் கோபி அண்ணா!!!

shroov

சமீப காலமாக சமூக வலைதளங்களில் பல முன்னாள் நடிகர்கள் ட்ரெண்டாகி கொண்டு வருகின்றனர். அப்படி ட்ரெண்டானவர்தான், நடிகர் கரண். இவர் பல திரைப்படங்களில் வில்லன், குணசித்திரம் மற்றும் கதாநாயகன் போன்று பல காதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் சில வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். திடீரென சமூக வலைதளத்தில் இவர் நடித்த கோயம்பத்தூர் மாப்பிள்ளை என்னும் படத்தில் இவருக்கு வந்த ஷ்ரூவ்வ்வ்! என்பதை வைத்துமீம்கள் வர, செம வைரலாகினார். இவர் நடித்த சமயத்தில் இருந்த ஆதரவை விட இந்த வைரலான நேரத்தில் அதிகமாக இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Advertisment

ஓவியா ஆர்மியை போன்று கரண் அண்ணா ஆர்மி வைக்கும் அளவிற்கு சமூக வலைதளத்தில் செல்வாக்கு செழித்து ஓங்கியது. இதுகுறித்து கரணிடம் கேட்டபோது, “ஆம், இந்த வைரல் எல்லாம் எனக்கு மிகவும் சந்தோசத்தை அளிக்கிறது. இன்னும் கூடிய சீக்கிரத்தில் படம் ஒன்று நடிக்கபோகிறேன். அதை பற்றின தகவல் விரைவில் வெளியாகும்” என்று குஷியாக சொன்னார்.

Advertisment

gopi anna

இதுபோன்று சமூக வலைதளத்தில் வரும் மீம்கள், பல பழைய நடிகர்களை ட்ரெண்டாக்கி வருகிறது. அந்த நடிகர்கள் நடித்த காலத்தில் கூட அவ்வளவு பிரபலம் அடைந்திருக்க மாட்டார்கள், ஆனால் தற்போது அவர்களின் திறமைகளை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

இந்நிலையில், இந்த வைரல் மீம்களில் தற்போதைய ட்ரெண்டாக இருப்பவர் மெட்டிஒலி என்னும் மெகா சீரியலை எடுத்த இயக்குனர் கோபி. இவர் சின்னத்திரையின் கைதேர்ந்த இயக்குனர், இயக்கிய நாடகங்கள் அனைத்தும் ஆயிரத்தை தாண்டிதான் உள்ளது. சின்னத்திரை மட்டும் இன்றி வெள்ளித்திரையில் எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என அப்போதைய பிரபல நடிகர் பரத்தை வைத்து எடுத்தார்.

தற்போது சமூக வலைதளத்தில், இவர் நடித்த நாடகங்களின் காட்சியையும், படங்களில் வரும் மாஸ் ட்ரான்ஸ்பர்மேஷன் சத்தத்தையும் இணைத்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். நடிகர் கரணை, கரண் அண்னா... கரண் அண்ணா... என்று கொண்டாடிய மீம்கள், தற்போது மெட்டிஒலி கோபியை கோபி அண்ணா... கோபி அண்ணா... என்று கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

social network
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe