Advertisment

கமல்ஹாசனுக்கு மெட்ரோ இரயில் நிர்வாகம் நோட்டீஸ்  

metro administration notice kamalhaasan

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில்பணிகள் ரூ. 60 கோடி மதிப்பில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரையிலான பணிகளும்தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடம் கலங்கரை விளக்கத்தில் தொடங்கி ஆழ்வார்பேட்டை, நந்தனம், கோடம்பாக்கம், வடபழனி, போரூர் வழியாக மொத்தம் 30 நிலையங்கள் அமைய உள்ளன. இதற்காக மெட்ரோ ரெயில்நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது.

Advertisment

அந்த வகையில் பாரதிதாசன் மெட்ரோ நிலைய வழித்தடத்திற்கானசாலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் நுழைவாயில் அமைந்துள்ளது. இதனால் மெட்ரோ இரயில்நிர்வாகம் கமல்ஹாசனுக்கு சொந்தமான அந்த 10 அடி இடத்தை எடுத்துக் கொள்ள போவதாகநோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அதில் இடத்திற்கானஉரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Chennai ACTOR KAMAL HASSHAN Chennai metro
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe