Advertisment

திருப்பதி வெங்கடாஜலபதியைக்கூட பார்த்துவிட முடியும்,  ஆனால் இயக்குனரை பார்க்கமுடியாது...

antony merku thodarchi malai

'மேற்கு தொடர்ச்சி மலை' திரைப்படம் விமரசகர்கள் மத்தியிலும் படம் பார்த்த ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அந்தப் படத்தின் கதைநாயகன் ஆன்டனி நக்கீரனுக்கு அளித்த பேட்டியில், தான் வாய்ப்புத் தேடியபோது நிகழ்ந்த அவமானங்கள், சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

Advertisment

அப்போது அவர், "முன்பெல்லாம்திருப்பதி வெங்கடாஜலபதியைக்கூட போய் பார்த்துவிட முடியும், ஆனால் இயக்குனர்களை பார்க்கமுடியாது. அலுவலகம் சென்றால் பலர் இடையில் இருப்பார்கள்.உள்ளபோய் நேராபார்க்கமுடியாது, நாம் என்ன சொல்ல வருகிறோம் என்றுகூட கேட்க மாட்டார்கள். இப்போது அப்படியல்ல. இப்போது இருப்பவர்கள் நின்று நிதானமாக என்ன சொல்கிறோம் என்பதைக் கேட்கிறார்கள். அந்த நேரத்தில் அப்படி இல்லை. இயக்குனர் வருவதற்கு முன்பே வரவேண்டும், அவர் உள்ளே வரும்போது அவர் பார்வையில் பட்டால்தான் அவர் மனது வைத்து கூப்பிடுவார். அப்போதுதான்பேச வாய்ப்பு கிடைக்கும். இப்போதுள்ள இயக்குனர்கள் பரவாயில்லை. வாட்ஸ் அப்பில் கூட தொடர்பு கொள்ள முடிகிறது" என்றார்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe