/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/168_16.jpg)
தமிழ் சினிமாவில் 'இயக்குநர் சிகரம்' என போற்றப்பட்டவர் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர். தன் படங்களில் பெண்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தும், பல்வேறு சமூக பிரச்சனைகள்குறித்தும் பேசி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி மறைந்தார்.
இந்த நிலையில், கே.பாலச்சந்தரின் நினைவாக சென்னையில் நினைவு சதுக்கம் அமைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்ட தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. அதில் ஒன்றாக மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் காவிரி மருத்துவமனை அருகில் ஆயிரம் சதுரடி அளவில் உள்ள போக்குவரத்து இடத்திற்கு கே.பாலசந்தர் சதுக்கம் அல்லது கே.பாலசந்தர் ரவுண்டானா அல்லது கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
முன்னதாக அவ்வை சண்முகம் சாலைக்கு வி.பி.ராமன் பெயரும், மந்தைவெளி மேற்கு வட்ட சாலைக்கு மறைந்த பிரபல பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் பெயரும் சென்னை மாநகராட்சி சார்பில் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)