Advertisment

மெய்யழகன் ஓ.டி.டி. - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு 

Meiyazhagan ott update

96 பட இயக்குநர் ச.பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அர்விந்த் சுவாமி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மெய்யழகன்’. சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ள இப்படத்தில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ், தேவதர்சினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

இப்படம் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. இதையொட்டி படத்தின் நீளத்தை 18 நிமிடங்கள் குறைத்து திரையிடப்பட்டு வருகிறது. இதையடுத்து படத்தின் வரவேற்பு தொடர்பாக நடந்த நன்றி தெரிவிக்கும் விழாவில், பிரேம் குமார் ஒரு வரலாற்றுக் கதை எழுதிவருவதாகவும் எப்போது அதை முடிப்பார் என காத்துக் கொண்டிருப்பதாகவும் பேசியிருந்தார். இதனால் விரைவில் இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ணவுள்ளதாக தெரிகிறது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி. அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வருகிற 25ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடன் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற 27ஆம் தேதி வெளியாகும் என ஒரு தகவல் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

Prem Kumar Arvind Swamy actor karthi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe