தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக்  தயாரிப்பில், இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இந்திரா. அஜ்மல் தஹ்சீன் இசையில் தயாராகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தனியார் மாலில் நடைபெற்றது. 

Advertisment

இவ்விழாவில் நாயகி மெஹ்ரீன் பேசியதாவது, “நான் மும்பையிலிருந்த போது, சபரீஷ் சார் போன் செய்து, முழுக்கதையும் சொன்னார். அவர் அறிமுக இயக்குநர் ஆனால் அவரிடம் பெரும் தெளிவு இருந்தது. மிக அழகாகக் கதை சொன்னார். அதே போல் படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார். இப்படத்தில் நடித்தது மிக மிக சுவாரஸ்யமாக இருந்தது. கயல் கதாப்பாத்திரம் மிக சவாலாக இருந்தது. எனக்கு மனதுக்கு மிகவும் நெருக்கமான ரோல், வசந்துடன் வேலை பார்த்தது மிக இனிமையான அனுபவம். அவர் தான் டயலாக் எல்லாம் சொல்லித் தந்தார். அவர் இயற்கையாகவே மிக நல்ல நடிகர்” என்றார். 

நடிகர் வசந்த் ரவி பேசியதாவது, “இந்திரா படம் ஒவ்வொரு நொடியும் உங்களை மகிழ்விக்கும். என் படம் என்பதால் சொல்லவில்லை, உண்மையிலேயே மிக வித்தியாசமான படம். சபரீஷ் கதை சொன்ன நொடியிலிருந்து படம் முடித்து வரும் வரை, படத்தில் உழைத்த அனைவரும் ஒரே உணர்விலிருந்தோம். படம் மிக அழகாக வந்துள்ளது. என் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் இருக்க வேண்டும் என நினைத்துத் தான் செய்கிறேன். தரமணி, ராக்கி, ஜெயிலர் மாதிரி  இந்திரா முக்கியமான படமாக இருக்கும். இது தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரில்லராக இருக்கும்” என்றார்.