Advertisment

ஊசி போடும்போது பயந்து நடுங்கி கையை இறுக்கிய நடிகை!

vdgdg

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகப் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்லக் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 25,000க்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து பத்தாயிரத்திற்கும் கீழ் பதிவாகிவருகிறது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், தடுப்பூசி குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாகப் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர்.

Advertisment

தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், தனுஷின் 'பட்டாஸ்' பட நடிகை மெஹரீன் பிர்ஸாதா கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன், "நானும் எனது ஊழியர்களும் எங்கள் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டோம். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட ஒரு நபராக, ஒவ்வொருவரும் தங்கள் தேசிய கடமையைச் செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த ஊசி அவ்வளவாக புண்படுத்தவில்லை. ஆனால், நானோ மென்மையான இதயம் கொண்டவள்" என பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Advertisment

coronavirus vaccine mehreen pirzada
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe