Advertisment

முன்னாள் முதல்வரின் பேரனோடு தனுஷ் பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்!

Mehrene

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான மெஹ்ரீன், சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, அவர் நடிப்பில் 'நோட்டா', 'பட்டாஸ்' ஆகிய படங்கள் வெளியாகின.

Advertisment

இவருக்கு, தற்போது பாவ்யா பிஷ்னோய் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகன் பாவ்யா பிஷ்னோய், ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது மூன்று முறை முதல்வராக இருந்த பஜன் லாலின் பேரன் ஆவார். இவர் தந்தை குல்தீப் பிஷ்னோய் ஹரியானா மாநிலத்தில் அதம்பூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக செயல்பட்டு வருகிறார். இந்த நிச்சயதார்த்த நிகழ்வானது நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இரு குடும்பத்தினரும் கலந்தாலோசித்து திருமணத் தேதி குறித்து விரைவில் முடிவெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

actor dhanush
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe