/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/meghna-raj.jpg)
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் இந்த வருடம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இளம் வயதிலேயே காலமானார். இவருடைய மனைவி மேக்னா ராஜ் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு காதலித்து திருமணம் மேற்கொண்டனர். சிரஞ்சீவி சர்ஜா இறக்கும் போது மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார்.
கணவர் இறந்து மூன்று மாதங்களுக்கு மேலான நிலையில் மனமுடைந்து இருந்த மகளுக்கு தந்தை சுந்தர்ராஜ் வளைகாப்பு நடத்த முடிவெடுத்தார். 'கணவர் இல்லாததால் எதற்கு வளைகாப்பு' என மேக்னா முதலில் மறுப்பு தெரிவித்தார். பின்னர் கணவரின் விருப்பத்தை நிறைவேற்ற மேக்னா ராஜ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவரது வீட்டில் மேக்னா ராஜின் வளைகாப்பு நடைபெற்றுள்ளது.
வளைகாப்பில் தன்னுடைய கணவரை மிஸ் செய்ய கூடாது என்பதற்காக, சிரஞ்சீவி சர்ஜாவின் ஆள் உயர கட் அவுட்டை தன் அருகிலேயே வைத்து கொண்டு வளைகாப்பை நடத்தியுள்ளார் மேக்னா. இந்நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)