Meghana Raj

'காதல் சொல்ல வந்தேன்' படத்தில் நடித்து, தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் மேக்னா ராஜ். இவருக்கும், பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவிற்கும் இடையே, 2018-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த ஜூன் மாதம் 6-ஆம் தேதி, சிரஞ்சீவிக்கு திடீரென நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட, அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்க, இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

சிரஞ்சீவி சர்ஜா மரணமடைந்த போது, அவரது மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். இதனையடுத்து, அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 22-ஆம் தேதிஆண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில், தற்போது மேக்னா ராஜ், அவரது அம்மா, அப்பா, ஒன்றரை மாத குழந்தை என நால்வருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நால்வரும் சிகிச்சை எடுத்து வருகின்றனர், இத்தகவலை மேக்னா ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment