megha akash engagement

ரஜினியின் பேட்ட படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். பின்பு சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா அஷோக் செல்வனின் சபாநாயகன் எனத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார்.

Advertisment

கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் மேகா ஆகாஷுக்கு திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது. சாய் விஷ்ணு என்பவரை அவர் நிச்சயம் செய்துள்ளார். இருவரும் நீண்ட காலமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

நிச்சயம் தொடர்பான புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த மேகா ஆகாஷ், “என் ஆசை நிறைவேறியது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைபப்டங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.