megha akash

Advertisment

'காலா' படத்தையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் கடைசியில் துவங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் இதுநாள் வரை வெள்ளை தாடியுடன் வயதான தோற்றத்தில் வலம் வந்த ரஜினி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற 'காலா' பட நிகழ்ச்சியில் கருப்பு முடி, தாடியுடன் வந்தார். இது தன் அடுத்த படத்திற்காக கருப்பு முடி, தாடிக்கு ரஜினி மாறியிருப்பதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே நாயகியாக சிம்ரன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.