Advertisment

நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இதுதான் காரணம் - விளக்கம் சொன்ன மீதா ரகுநாத்   

Meetha Ragunath  Speech at Good Night Thanks Giving Meet

Advertisment

குட் நைட்திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில்,ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும்விதமாக ஒரு சந்திப்பினை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. அதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை மீதா ரகுநாத் பேசியதாவது: இந்தப் படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் எழுதிய நல்ல விமர்சனங்கள் தான் வெற்றிக்கான முக்கியமான காரணம். அவர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் என்பதையும் தாண்டி, அனைவரையும் சமமாக மதித்து, எங்களுக்கு நல்ல நண்பர்களாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. விநியோகஸ்தருக்கும் நன்றி. இயக்குநருக்கும் எனக்கும் ஒரே வயது தான். அவர் என்னிடம் கதை சொன்னபோது, கதையில் இருந்த எதார்த்தம் தான் என்னை ஒப்புக்கொள்ள வைத்தது. இப்படி ஒரு அழகான படத்தை எடுத்த இயக்குநர் வினாயக் அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தில் எடிட்டரின் உழைப்பு மிகப்பெரியது.

நீண்டகாலம் படப்பிடிப்பு நடந்தாலும் இந்தப் படத்தின் கேமராமேன் சலித்துக்கொள்ளவே இல்லை. கலை இயக்குநரின் கைவண்ணம் படம் பார்க்கும்போது தெரிகிறது. மணிகண்டன் சார் சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த மனிதர். அவருடைய அர்ப்பணிப்பு மிகப்பெரிது. அவரோடு பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரமேஷ் சார் உள்ளிட்ட மற்ற அனைவரும் பல படங்கள் செய்திருந்தாலும், இதில் ஒரு குடும்பமாக மனநிறைவுடன் வேலை செய்தனர். ஷான் ரோல்டன் சாரின் இசை தான் இந்தப் படத்தை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் சென்றது. அவர் மிகவும் நல்ல மனிதர். அதுவே அவருடைய இசையிலும் பிரதிபலிக்கிறது.

Advertisment

கேமராவுக்குப் பின்னாலிருந்து வேலை செய்த அனைவரும் தூங்காமல் பல நாட்கள் வேலை செய்தனர். ஆனால் ஒருவர் கூட முகம் சுளிக்கவில்லை. ரசிகர்களின் அன்புக்கு ரொம்ப நன்றி. என்னுடைய அம்மா அப்பாவுக்கும், சகோதரிக்கும், கடவுளுக்கும் நன்றி.

Goodnight movie
இதையும் படியுங்கள்
Subscribe