Skip to main content

நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இதுதான் காரணம் - விளக்கம் சொன்ன மீதா ரகுநாத்   

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

Meetha Ragunath  Speech at Good Night Thanks Giving Meet

 

குட் நைட் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு சந்திப்பினை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. அதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். 

 

நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை மீதா ரகுநாத் பேசியதாவது: இந்தப் படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் எழுதிய நல்ல விமர்சனங்கள் தான் வெற்றிக்கான முக்கியமான காரணம். அவர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் என்பதையும் தாண்டி, அனைவரையும் சமமாக மதித்து, எங்களுக்கு நல்ல நண்பர்களாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. விநியோகஸ்தருக்கும் நன்றி. இயக்குநருக்கும் எனக்கும் ஒரே வயது தான். அவர் என்னிடம் கதை சொன்னபோது, கதையில் இருந்த எதார்த்தம் தான் என்னை ஒப்புக்கொள்ள வைத்தது. இப்படி ஒரு அழகான படத்தை எடுத்த இயக்குநர் வினாயக் அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தில் எடிட்டரின் உழைப்பு மிகப்பெரியது. 

 

நீண்டகாலம் படப்பிடிப்பு நடந்தாலும் இந்தப் படத்தின் கேமராமேன் சலித்துக்கொள்ளவே இல்லை. கலை இயக்குநரின் கைவண்ணம் படம் பார்க்கும்போது தெரிகிறது. மணிகண்டன் சார் சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த மனிதர். அவருடைய அர்ப்பணிப்பு மிகப்பெரிது. அவரோடு பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரமேஷ் சார் உள்ளிட்ட மற்ற அனைவரும் பல படங்கள் செய்திருந்தாலும், இதில் ஒரு குடும்பமாக மனநிறைவுடன் வேலை செய்தனர். ஷான் ரோல்டன் சாரின் இசை தான் இந்தப் படத்தை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் சென்றது. அவர் மிகவும் நல்ல மனிதர். அதுவே அவருடைய இசையிலும் பிரதிபலிக்கிறது. 

 

கேமராவுக்குப் பின்னாலிருந்து வேலை செய்த அனைவரும் தூங்காமல் பல நாட்கள் வேலை செய்தனர். ஆனால் ஒருவர் கூட முகம் சுளிக்கவில்லை. ரசிகர்களின் அன்புக்கு ரொம்ப நன்றி. என்னுடைய அம்மா அப்பாவுக்கும், சகோதரிக்கும், கடவுளுக்கும் நன்றி.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அவருக்கு "லவ் யூ" சொல்லத்தான் தோன்றுகிறது - ரமேஷ் திலக் உற்சாகம்

Published on 17/05/2023 | Edited on 18/05/2023

 

Ramesh Thilak  Speech at Good Night Thanks Giving Meet

 

குட் நைட் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு சந்திப்பினை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. அதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். 

 

நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ரமேஷ் திலக் பேசியதாவது:  பத்திரிகையாளர்கள் கொடுத்த நல்ல விமர்சனங்கள் தான் இந்தப் படத்துக்கு உதவியது. அவர்களுக்கு நன்றி. உதவி இயக்குநர்களால் தான் இவை அனைத்தும் சாத்தியமானது. அவர்களுக்கு என்னுடைய நன்றி. நல்ல படத்தை எடுக்கும் திருப்தி போதும் என்று சொல்லி எங்களை முழுமையாக நம்பிய தயாரிப்பாளர்களுக்கு என்னுடைய நன்றி. இந்தப் படத்தை அனைவருக்கும் கொண்டு சேர்த்த சக்திவேல் சாருக்கு நன்றி. பாடலாசிரியருக்கு நன்றி. சகோதரர் ஷான் ரோல்டன் அவர்களின் இசைதான் எங்களுடைய நடிப்பை மெருகேற்றியது. அவருக்கு நன்றி. 

 

ஒரு குடும்பமாகத்தான் நாங்கள் அனைவரும் இருந்தோம். மணிகண்டனை பொறுத்தவரை அவருக்கு "லவ் யூ" சொல்லத்தான் தோன்றுகிறது. பாலாஜி சக்திவேல் சார் மிகவும் ஜாலியானவர். அழுகை என்பது ஆணுக்கும் பொதுவானது தான். வினாயக்கின் எழுத்து மிகவும் ஆழமாக இருந்தது. அவருடைய எழுத்துக்கு என்னுடைய நன்றி. வீட்டில் நடக்கும் விஷயங்களை மிகவும் இயல்பாக எழுதியதற்காக இயக்குநர் வினாயக் மற்றும் கூடுதல் திரைக்கதை ஆசிரியர் மணிகண்டன் ஆகியோருக்கு நன்றி. எனக்கு இந்தப் படத்தைக் கொடுத்ததற்கு ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி.
 

 

 

Next Story

தயாரிப்பாளரிடம் இப்படியெல்லாம் சொன்னார்கள் - மணிகண்டன் வேதனை

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

Manikandan  Speech at Good Night Thanks Giving Meet

 

குட் நைட் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு சந்திப்பினை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. அதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். 

 

நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் மணிகண்டன் பேசியதாவது: இந்தப் படத்தின் ரிலீஸுக்கு முன் மிகுந்த பதற்றம் இருந்தது. நீங்கள் அனைவரும் கைதட்டி மகிழ்ந்து, நேர்மையுடன் விமர்சனம் செய்து பாராட்டியதுதான் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம். உங்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய நன்றி. இப்படி ஒரு கதை இருக்கிறது என்று என்னிடம் முதலில் சொன்னது ரமேஷ் தான். இயக்குநர் வினாயக் கதை சொன்ன விதம் மிகவும் நன்றாக இருந்தது. பின்னணியில் இசையை ஓடவிட்டு கதையை சொன்னார். அவருக்கு இந்தக் கதை மீது இருந்த பிடிப்பு என்னைக் கவர்ந்தது. தயாரிப்பாளர்களிடம் மணிகண்டனை வைத்து எடுக்க வேண்டுமா என்று பலர் கேட்டுள்ளனர். ஆனால் அவர் என்னை நம்பினார். தயாரிப்பு தரப்பு குழுவினருக்கு என் நன்றி. 

 

இந்தப் படத்தின் எடிட்டர், கேமராமேன் என்று அனைவரும் இரவு, பகல் பாராது உழைத்தனர். இந்தப் படம் குறித்து எங்களிடம் தயாரிப்பாளர்கள் ஒரு கேள்வி கூடக் கேட்கவில்லை. அந்த அளவுக்கு எங்களை நம்பினார்கள். இந்தப் படத்தில் வேலை செய்த பலர், படம் குறித்து மற்றவர்களிடம் சிலாகித்துப் பேசினார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. நான் சின்ன ரோல் செய்தால் கூட ரமேஷ் திலக் என்னை அழைத்து பாராட்டுவார். என்னை எந்த இடத்திலும் எப்போதும் விட்டுக்கொடுக்காதவர் ரமேஷ் திலக். தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி வருகிறார். எனக்கு விஜய் சேதுபதி அண்ணா எப்படியோ, அதுபோல் தான் ரமேஷ் திலக்கும். 

 

இந்தப் படத்தில் நடித்த அனைவரும் ஒரு குடும்பம் போலவே இருந்தனர். அது படத்துக்கும் உதவியது. சமூகத்தைப் புரட்டிப் போட்ட படங்களை எடுத்திருந்தாலும் பாலாஜி சக்திவேல் சார் எங்களோடு எப்போதும் இயல்பாகவே பழகுவார். மீதாவின் சின்சியாரிட்டி என்னை மிகவும் வியக்க வைத்தது. ஷான் ரோல்டன் சார் இசையமைக்கிறார் என்பதால் தான் இந்தப் படத்துக்கு கவனம் கிடைத்தது. எங்களை நம்பியதற்கும், அருமையான இசையை வழங்கியதற்கும் அவருக்கு என்னுடைய நன்றி. நாங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்துக்கும் உங்களுடைய ஆதரவால் வெற்றி என்கிற பலன் கிடைத்துள்ளது.