meera mithun

சூர்யா நடிப்பில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீரா மிதுன். அதற்கு முன்பே '8 தோட்டாக்கள்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார். மிஸ் சௌத் இந்தியா அழகி பட்டத்தை வென்ற இவர் சென்னையைச் சேர்ந்த அக்மார்க் தமிழ் பொண்ணு. படிப்பு, நடனம் என்று மட்டுமே இருந்த இவரை அவரது உயரமும் நிறமும் ஒரு மாடல் அழகியாக மாற்றியது. 8 தோட்டாக்கள் படத்தில் கொஞ்சம் நெகடிவ் சாயல் கலந்த ஒரு கேரக்டரில் நடித்த இவரைத்தேடி தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. மீரா மிதுனின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், அடுத்தடுத்து தேடி வந்த பல பட வாய்ப்புகள் இவருக்கு திருப்திகரமாக இல்லை. அதனால் தற்போது செலக்டிவாக சில படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 2019ல் வெளியாக உள்ள அந்தப் படங்கள் திரையுலகிலும் தன்மீது மிகப்பெரிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் என திடமாக நம்புகிறார் மீரா மிதுன்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மேலும் மாடலிங் சினிமா இரண்டிலுமே சமமான கவனம் செலுத்தவே விரும்புகிறார். மாடலிங்கில் இருந்தபோதே இவரை ஊக்கப்படுத்தி அவ்வப்போது உற்சாகம் கொடுத்த நடிகர் விஷால், சினிமாவிற்கு வருமாறு முன்பே அழைப்பு விடுத்திருக்கிறார். சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனுக்கு அழைக்கப்பட்ட மீரா மிதுன், லுக் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் வரை சென்றுவிட்டார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு அவருக்கு கைகூடாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக பின்னர் அந்த கேரக்டரில் நடித்தவர் த்ரிஷா. அதேபோல கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் மீரா மிதுன். ஆனால் அதுவும் சில காரணங்களால் கடைசி நேரத்தில் இவரை விட்டு விலகிப்போனது. விலகிப்போன வாய்ப்புகள் மீண்டும் வேறு வடிவத்தில், வேறு படங்களில் தன்னைத் தேடிவரும் என திடமாக நம்புகிறார் மீரா மிதுன்.