Advertisment

“அந்த வீடியோவை வெளியிட்டா, எதிர்கொள்ளத் தயாரா?” - இயக்குனரை மிரட்டும் ‘பிக்பாஸ்’ மீரா மிதுன்

அருண் விஜய் தடம் படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீனின் அக்னிச்சிறகுகள் படமும் ஒன்று. விஜய் ஆண்டனி, ஷாலினி பாண்டே உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார். இந்த படத்தில் அருண் விஜய்யுடன் சேர்ந்து முதன்மை கதாபாத்திரத்தில் பிக்பாஸ் மீரா மிதுன் நடிக்க இருப்பதாக மீரா மிதுன் சமூக வலைதளங்களில் தெரிவித்துவந்தார். ஒருமுறை அருண்விஜய்யுடன் இணைந்து புகைப்படத்துடன் இந்த தகவலை மீராமிதுன் ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

Advertisment

meera mithun

ஆனால், சமீபத்தில் அக்னிச் சிறகுகள் குழு பிரதான காட்சிகளை ஷுட் செய்வதற்காக இயக்குனர் நவீனுடன் ரஷ்யா விரைந்தது. அதில் கமல்ஹாசனுடைய இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் இணைந்திருந்தார். எனக்கு பதிலாக அக்‌ஷராஹாசனை நடிக்க அழைத்து சென்றுள்ளனர் என்று மீரா மிதுன் இயக்குனர் நவீன் மீது காட்டமாக ட்வீட் செய்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பதிவில், “ ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் ஷாலினி பாண்டேவுக்கு பதிலாகத் தான் அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார். அவர் தான் முதன்மை நாயகி. மீரா மிதுன் முதன்மை நாயகியாக ஒப்பந்தம் செய்யப்படவில்லை. எனக்குத் தெரியாமலேயே பத்திரிகைகளில் நான் படத்தில் இருப்பதாகச் சொல்லி வருகிறார். முதலில் இதை ஒரு விவகாரமாக்க நான் விரும்பவில்லை. ஆனால் இப்போது...." என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

நவீனின் இந்த ட்வீட்களுக்கு மீரா மிதுன், "உங்களுக்கு இந்தப் பேட்டி ஞாபகம் இருக்கிறதா?. இந்த விவகாரத்தில் ஊடகமும் பொய் சொல்கிறது என்கிறீர்களா? ஏஞ்சலினா ஜுலி போல நடிப்பதற்கு சில காட்சிகளை வேறு என்னிடம் காட்டி பேசினீர்கள். உங்களுக்கு அது மறந்துவிட்டால், நான் சொல்லட்டுமா இயக்குநர் நவீன் சார்.

தொடர்ச்சியாக இவ்வாறு பொய் சொல்லிக் கொண்டே இருந்தீர்கள் என்றால், இது தொடர்பாக வீடியோ ஆதாரமும் என்னிடம் உள்ளது. அதை ஊடகத்திடம் வெளிப்படுத்துவேன். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தான் என்னை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்து, உங்களைச் சந்திக்கச் சொன்னார். நீங்கள் ஒரு பெரிய பொய்யர். இந்தப் பேட்டியை அளித்தது நீங்கள் தான். ஒரு ஆணாக உண்மையைப் பேசுங்கள். அல்லது உங்களுக்கு ஞாபக மறதி நோய் இருக்கிறதா. நல்ல ஒரு மனநல மருத்துவரைப் பாருங்கள்” என்றார்.

இதற்கு பதிலளித்த நவீன், “ஆணாக இருப்பதைப் பெருமையாக நினைத்துக் கொள்ளும் ஆள் நான் இல்லை. என்னைவிட பெண்களான எனது அம்மா, அக்கா, மனைவி அனைவருமே துணிச்சல் மிக்கவர்கள். உங்களுக்கு எதோ பெரிய பிரச்சனை இருக்கிறது தயவு செய்து மருத்துவரை அணுகுங்கள். உங்களுடைய முட்டாள்தனமான ட்வீட்களுக்கு இதுதான் என்னுடைய கடைசி பதில்” என்று கூறினார்.

நவீனின் இந்த ட்வீட்டுக்கு கடும் கோபமாக, "மைண்ட் யுவர் வேர்ட்ஸ். ஒரு பெண்ணை மருத்துவரைச் சென்று பார்க்கச் சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. உங்களுக்கும் எனக்கும் நடந்த படம் தொடர்பான உரையாடல்கள் வீடியோவாகவும் ஆடியோவாகவும் இருக்கிறது. அதை நான் வெளியிட்டால் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பப் பெண்களையும் பாதிக்கும். வெளியிடட்டுமா? அதை எதிர்கொள்ள உங்களுக்குத் துணிச்சல் இருக்கிறதா?" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் மீரா மிதுன்.

meera mithun
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe