gdsgs

Advertisment

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் சர்ச்சையில் சிக்கி பிரபலமான நடிகை மீரா மிதுன், சமூக வலைதளங்களில் அவ்வவ்போது சர்ச்சையான கருத்துகளைப் பதிவு செய்து பிரபலமாகி வந்தார். இவர் சமீபத்தில் விஜய், சூர்யா, ஜோதிகா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டது திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அவர்களது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், விஜய், சூர்யா பற்றி அவதூறாக பேசியதற்காக மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார் நடிகை மீரா மிதுன். அதில்...

"நான் இதுவரை நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதூறாகப் பேசியதற்கு, திருநங்கையும், பத்திரிகையாளருமான அப்சரா ரெட்டிதான் காரணம். பல கட்சிகள் தாவும் அவர் என்னுடன் நண்பராக நடித்து மறைமுகமாக என் பின்னால் இருந்து என்னை இப்படி பேச வைத்துள்ளார். என்னை சினிமா உலகம் ஒதுக்கியதற்கு விஜய், சூர்யாதான் காரணம் என்று என்னை நம்பவைத்தார். அப்சரா ரெட்டியின் இந்த சைபர் புல்லிங்கில் சிக்கி நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதூறாகப் பேசியதற்கு அனைவரிடமும் என் தரம் தாழ்ந்த (?!) மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.