meera

Advertisment

"எட்டுத் தோட்டாக்கள்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா மிதுன். மாடலிங் துறையிலிருந்து தமிழ் சினிமாவில் ஒருசில கதாபாத்திரங்களில் தோன்றினார். இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாம் சீஸனில் பங்குபெற்றதன் மூலம் பிரபலமடைந்தார்.

பிக்பாஸில் இயக்குனர் சேரன் மீது, மீரா மிதுன் அவதூறு பரப்பியபின் இவருக்கு சமூக வலைதளத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. அவர் பிக்பாஸைவிட்டு வெளியேறிய பின்பும் இது தொடர்ந்தது. இதன்பின் தினசரி தன்னைத்தானே புகழ்ந்துகொண்டு, மற்றவ போட்டியாளர்களை இகழ்ந்து வீடியோக்களை பதிவிட்டார். இதுவும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் நடிகை த்ரிஷா குறித்து மீரா மிதுன் ட்வீட் செய்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. “இனி என்னை போல ஹேர் ஸ்டைல், என்னை போன்ற தோற்றம் என மார்பிங் செய்து புகைப்படங்களை நீங்கள் எடுப்பதை கண்டால் சீரியஸாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கும்படி ட்வீட் செய்துள்ளார்.