meera anilkumar

Advertisment

கரோனா அச்சுறுத்தலால் கடந்த மூன்று மாதங்களாக திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் வீட்டிற்குள்ளேயே, நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை வைத்து முடிக்கப்பட்டு வருகின்றன. பிரபலங்களின் திருமணமும் அதுபோன்றுதான் மிகவும் எளிமையாகநடைபெறுகிறது. தற்போது இந்த வரிசையில் தொலைக்காட்சி பிரபலமான மீரா அனில் இணைந்திருக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்தவரான மீரா, கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் காமெடி ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் இவர் அமலா பால் - நிவின் பாலி நடித்த 'மிலி' திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவர் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரான விஷ்ணு என்பவரை மணமுடித்திருக்கிறார். குடும்பத்துடன் படுசிம்பிளாக கோயிலில் நடைபெற்ற இவர்களின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.