Meera Chopra

தன்னுடைய குடும்பத்தினர் இருவர் கரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்ததையடுத்து, இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனத்தை நடிகை மீரா சோப்ரா முன்வைத்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என்னுடைய நெருங்கிய உறவினர்கள் இருவர் மரணமடைந்துவிட்டனர். இது கரோனா தொற்றால் ஏற்பட்ட மரணம் அல்ல; நம்முடைய தோற்றுப்போன மருத்துவக் கட்டமைப்பினால் செய்யப்பட்ட கொலை. நம் நாட்டில் மட்டும்தான் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர்.நிலைமை அச்சுறுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

நடிகை மீரா சோப்ராவின் மறைந்த உறவினர்களில் ஒருவர்,இரண்டு நாட்களாகதீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டதும், மற்றொருவர் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணித்ததும் குறிப்பிடத்தக்கது.