gesge

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,84,795 என்ற அளவிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,52,225 என்ற அளவிலும் இருக்கிறது. கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக உலக அளவில் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்து வருகின்றன. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போது அமலில் இருக்கும் நான்காவது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் உள்நாட்டு விமான சேவைகள் நேற்று முன்தினம் முதல் ஆரம்பமானது.

Advertisment

Advertisment

விமானத்தில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை வைத்திருக்க வேண்டும், கரோனா பரிசோதனை செய்திருக்கவேண்டும் உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களோடு பயணிகள் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் இதுகுறித்து எஸ்.ஜே. சூர்யா படங்களான 'அன்பே ஆருயிரே' மற்றும் 'இசை' பட நாயகியான நிலா என்கிற மீரா சோப்ரா சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... ''விமானத்தில் செல்லும் ஒவ்வொரு பயணிகளுக்கும் கட்டாயம் கோவிட் 19 சோதனை செய்யப்பட வேண்டும். அதிக ஆபத்து உள்ள இந்தக் காலங்களில் நீங்கள் பறக்கிறீர்கள் என்றால், மற்றவர்களை ஆபத்தில் வைக்காதபடி உங்களை நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.