Published on 30/09/2022 | Edited on 30/09/2022

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் இன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நந்தினி கதாபாத்திரம் நடிகை மீனா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இனி என்னால் அதை வெளியில் சொல்லாமல் இருக்க முடியாது. வாழ்நாளில் முதல் முறையாக நான் ஒருவரை பார்த்து பொறாமைப்படுகிறேன். ஐஸ்வர்யா ராய், ஏனென்றால் பொன்னியின் செல்வனில் எனது கனவு வேடத்தில் அவர் நடித்திருக்கிறார்" என்று அவரின் புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார்.