Meena Kumari biopic, Kriti Sanon to play lead role

இந்திய சினிமா வரலாற்றில் முக்கிய நாயகிகளில் ஒருவராகப் பார்க்கப்படுபவர் பாலிவுட் நடிகை மீனா குமாரி. சிறுவயதிலிருந்து நடிக்கத்தொடங்கிய அவர் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளில் 90 படங்களில் நடித்துள்ளார். ஆனால், அவரது நிஜ வாழ்க்கை மிகவும் வலிமிக்கது என அவர் வாழ்ந்த காலகட்டங்களில் பரவலாகப் பேசப்பட்டது. இதனால் அவருக்கு 'துயரங்களின் ராணி' (Tragedy Queen) என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.குறிப்பாக அவரது குரல் பிரபலமாக இருந்தது.

Advertisment

ரசிகர்கள் மனதில் நீங்காஇடம்பிடித்த இவர் குறுகிய காலத்திலேயே தனது 38வது வயதில் காலமானார். இவரது வாழ்க்கையை தழுவி பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா படம் எடுக்கவுள்ளார். இப்படம் மூலம் இயக்குநராக அவர் அறிமுகமாகிறார். இந்நிலையில் மீனா குமாரி கதாபாத்திரத்தில் இந்தியில்நடித்து வரும் க்ரித்தி சனோன் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment