meena condemn about his second marriage rumours

90களில் மற்றும் 2000 தொடக்கத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரைத்திருமணம் செய்து கொண்ட நிலையில், 2022 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் வித்யாசாகர் மரணமடைந்தார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. அக்குழந்தையுடன் தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார் மீனா. இதனிடையே மீனா இரண்டாம் திருமணம் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வதந்திகள் உலா வந்து கொண்டிருந்தது. அதை திட்டவட்டமாக மறுத்திருந்தார் மீனா.

Advertisment

இந்த நிலையில், தனது இரண்டாவது திருமண வதந்திகள் குறித்துப் பேசிய மீனா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய அவர், “இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகள் தன்னையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் வருத்தத்திற்கு ஆழ்த்தியது. தகவல்களை சரி பார்க்காமல் அதை செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும். தனது வாழ்க்கை தற்போது திருப்திகரமாக இருக்கிறது” என்றார்.

Advertisment

மேலும், “சமூக வலைத்தளத்தில் உண்மைகளை சொன்னால் தான் நல்லது. எனக்கு இரண்டாவது திருமணம் பற்றி எந்த சிந்தனையும் இப்போது இல்லை. அது பற்றி வெளியாகும் வதந்திகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம்'' என்று கூறியுள்ளார். மீனா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். மலையாளத்தில் ஒரு படமும் தமிழில் ஒரு படமும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.