Skip to main content

ஊடகத் தோழர்களுக்கு... தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுதல்!

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

“Media guys should bring self-restraint” - South Indian Actors' Association

 

தமிழ் சினிமாவிலும், சின்னத்திரையிலும் குணச்சித்திர நடிகராக திகழ்ந்தவர் மாரிமுத்து. சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. அவரது மகள் இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். 

 

இருவரது இறுதிச்சடங்கிலும் செய்தி மற்றும் யூடியூப் சேனல்கள் குவிந்திருந்து செய்திகளை தந்த வண்ணம் இருந்தது. ஆனால் சில சேனல்கள் அநாகரிகமாகவும் நடந்து கொண்டனர். இறந்தவர்களைப் பற்றி நீங்கள் ஏதாவது சொல்லுங்களேன், என்று சோகத்தில் இருப்பவர்கள் முன் மைக்கை நீட்டி அவர்களது பேட்டிகளை கேட்டு தொல்லை தந்தனர். 

 

ஊடகங்களின் வரம்புமீறிய இந்த செயலைக் கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “திரையுலகில், நடிகர்களின் படைப்புகளும் செயல்பாடுகளும் பொது மக்களின் பாராட்டுகளிலும், கவனிப்புகளிலுமே புகழடைகிறது. அதற்கு பெரும் பங்காற்றுவது ஊடகத்துறையும், ஊடகவியலாளர்களும்தான்..! அக்கலைஞர்களை, படைப்புகளைத் தாண்டி அவர்களது குடும்பம் மற்றும் திறமைகள், குணாதிசயங்கள், சமூக பங்களிப்புகள் போன்றவற்றை மக்களுக்கு கொண்டு செல்வதில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி, இணைய ஊடகங்களின் பங்களிப்பு பெரும்பங்காற்றுகிறது”

 

“ஆனால், சமீபத்தில் எதிர்பாராமல் மறைந்த மாரிமுத்து, விஜய் ஆண்டனி மகள் இழப்பின் போது ஊடகத்துறை நண்பர்கள் நடந்து கொண்டது பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. இறுதி நிகழ்வில் நடந்த ஊடகத்துறையினரின் செயல்பாடுகள் எல்லை மீறி பலரையும் சங்கடத்திலும், விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறோம்”

 

“துயரம் தரும் செய்திகள் சம்பந்தப்பட்டோரை சேரும் முன்பே, தவறான தகவலால் பரபரப்பாக்குவதும், அதிர்ச்சியால் உடைந்து துயரத்தில் நிற்கும் குடும்பத்தை ஊடக நெருக்கடிக்கு உள்ளாக்குவதும் எந்தவிதத்தில் நியாயப்படுத்துவது? துயரத்தால் தாக்குண்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வரும் கலைஞர்களையும், ஊடக பரபரப்பிற்கு உள்ளாக்குவது எந்தவிதத்தில் சரியானது?”

 

“எதிர்பாராத இழப்பினால் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் குடும்பத்தினரும், துக்கம் விசாரிக்க வந்த உறவினர்களும் அவர்களுக்கு உதவ வந்த கலைத்துறை நண்பர்களும், ஊடக நெருக்கடியில் சிக்கி, இறுதி நிகழ்வுகளைக்கூட முழுமையாக செய்யவிடாமல் தடுப்பது எந்த விதத்தில் சரியானது”

 

“கலைஞர்களின் இறுதி நிகழ்வை மக்களுக்கு கொண்டு சென்று நிரந்தர புகழ் சேர்க்கவேண்டும் என்ற ஊடக நண்பர்களின் செயல்பாட்டின் எல்லைகள் எதுவரை? எதிர் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க ஊடக செயல்பாட்டின் எல்லைகளை தீர்மானிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்”

 

“எங்கள் கலைஞர்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பொறுப்புணர்ந்து உங்களுக்குள் தீவிரமான சுயக்கட்டுப்பாட்டை ஊடகத் தோழர்கள் கொண்டு வர வேண்டும். அரசும் இதை கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்பதே எம் வேண்டுதல்” என்று வெளியிட்டுள்ளார்கள்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரத்த தானம் செய்த ரசிகர்கள்; விருந்தளித்து மகிழ்ந்த நடிகர் கார்த்தி!

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
Fans who donated blood Actor Karthi who enjoyed hosting

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்குத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் ரசிகர்களாக மட்டுமில்லாமல் பொதுமக்களுக்குப் பல நல்ல காரியங்களைச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க இரத்த தானம் முகாம்கள் நடைபெற்றது. இவ்வாறு இரத்த தானம் செய்தவர்களில் முதற்கட்டமாக வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 200 ரசிகர்களை நடிகர் கார்த்தி இன்று நேரில் சந்தித்தார்.

சென்னை தியாகராய நகரில் இரத்த தானம் செய்தவர்களுக்கு நடிகர் கார்த்தி சான்றிதழ் வழங்கி, விருந்தளித்தார். மேலும், இரத்த தானம் செய்ததற்கு நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன்பின் நடிகர் கார்த்தி பேசும் போது, “அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. எனது பிறந்தநாளில், இரத்த தானம் செய்த போதே, உங்களுடன் கலந்து கொள்ள நினைத்தேன். எனினும், உடல்நிலை சரியில்லாததால் கலந்து கொள்ள முடியாமல் போனது. அடுத்த முறை நிச்சயம் உங்களுடன் இணைந்து கொள்வேன். நீங்கள் அனைவரும் இரத்தம் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. 

Fans who donated blood Actor Karthi who enjoyed hosting

நான் மருத்துவர்களுடன் குழுவில் இருக்கிறேன். அவர்கள் இரத்தம் இல்லை என்று கூறுவதைக் கேட்டிருக்கிறேன். முக்கியமாக அரசு மருத்துவமனைக்குப் பெரிய அளவில் யாரும் இரத்தம் கொடுப்பதில்லை. அவரவர் தங்களின் உறவினர்களுக்குக் கொடுத்துக் கொள்வார்கள். யாரென்றே தெரியாதவர்களுக்கு இரத்தம் கொடுத்துள்ளீர்கள். அது சாதாரண விஷயமே கிடையாது. அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. அதுவும் அரசு மருத்துவமனையில் செய்ததற்கு நன்றி. அடுத்த வருடம் உங்களுடன் இணைந்து முதலில் நான் துவங்கி வைக்கிறேன்.

அனைவரும் உங்கள் உடல்நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் செய்த நல்ல விஷயங்கள் அவர்களுக்குச் சென்று சேர வேண்டும். அனைவரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உங்களுக்குப் பதிலளிக்க முடியாமல் போய்விட்டது. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இரண்டு படங்கள் முடிந்துவிட்டன, விரைவில் அவை ரிலீஸ் ஆகிவிடும். அடுத்து சர்தார் 2 துவங்க இருக்கிறது. அடுத்த வருடம் லோகேஷூடன் மீண்டும் பிரியாணி பக்கெட்டை எடுக்க வேண்டும்” என்றார். 

Next Story

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
karthi thanked his fans

'ஜப்பான்' படத்தைத் தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இது கார்த்தியின் 26வது படமாக உருவாகிறது. மேலும் பிரேம் குமார் இயக்கத்திலும் ஒரு படம் நடித்துள்ளார். இப்படம் அவரது 27வது படமாக உருவாகிறது. 

இந்நிலையில் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இரு படக்குழுவும் படத்தின் அப்டேட்டை வெளியிட்டிருந்தனர். அதே சமயம் கடந்த 25ஆம் தேதி கார்த்தியின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்த இரத்த தானம் முகாமில் சுமார் 150 பேர் இரத்த தானம் செய்தார்கள். 

மேலும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் இன்று பிறந்த 100 குழந்தைகளுக்கு உடை மற்றும் தாய்மார்களுக்குப் பரிசு பெட்டகம் கொடுத்து இருக்கிறார்கள். இதையடுத்து இரத்த தானம் மற்றும் பரிசு வழங்கிய ரசிகர்களுக்கு ஆடியோ மூலமாக நன்றி தெரிவித்தார். கார்த்தியின் ரசிகர்கள் கடந்த இரண்டு வாரங்களாக அன்னதானம், நீர் மோர் வழங்குதல், ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.