
“எனது அம்மாவை வெளியில் நிற்க வைத்துவிட்டு தனி அறையில் பாட வாய்ப்பு வேண்டும் என்றால் எனக்கு ஒரு கிஸ் கொடு என்று கேட்டார்”
இந்தியில் பிரபல இசையமைப்பாளர் அனு மாலிக் மீது 15 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக இப்படி ஒரு குற்றச்சாட்டை மீ டூ இயக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் பாடகி ஸ்வேதா பண்டிட்.
அனு மாலிக் மீது ஏற்கெனவே பாடகிகள் சோனா மகாபத்ரா, அலிஷா சினாய் ஆகியோரும் பாலியல் புகார்களை கூறியிருந்தனர். இந்நிலையில் ஸ்வேதாவின் குற்றச்சாட்டு கேலிக்குரியது என்று கூறிய அனு மாலிக், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவருடைய வழக்கறிஞர் ஜுல்பிகர் மேமன் இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அனு மாலிக் மீ டூ இயக்கத்தை ஆதரிப்பதாகவும், ஆனால், ஒருவருடைய நற்பெயரைச் சிதைக்க இந்த இயக்கத்தை பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

அனு மாலிக்கை ஆதரித்து பாடலாசிரியர் சமீர் அன்ஜானும் அறிக்கை வெளியிட்டுள்ளார். “ஸ்வேதா சொல்லும் சம்பவம் நடந்த அன்று நானும் ரெகார்டிங் அறையில் இருந்தேன். ஸ்வேதாதான் தனி அறையில் பாடிக்காட்டுவதாக கூறினார். அனு மாலிக் அதை மறுத்து, அவருடைய அம்மா முன்னிலையிலேயே பாடும்படி கேட்டார். ஸ்வேதாவுக்கு அப்போது 15 வயதுதான் இருக்கும். அனு மாலிக் அப்படி தப்பாக நடந்திருந்தால் அறையிலிருந்து வெளியே வந்து அவருடைய அம்மாவிடம் கூறியிருக்கலாமே. 15 ஆண்டுகள் ஏன் மூட்டை கட்டி வைத்திருந்தார்” என்று கேட்டிருக்கிறார்.
இதற்கிடையே, பாடகி கராலிஸா மோண்டெய்ரோவும் தனது 15 வயதில் அனு மாலிக் தவறான நோக்கத்தில் தனது வீட்டுக்கு வரும்படி அழைத்தார் என்று கூறியிருக்கிறார். இத்தகைய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்தி தொலைக்காட்சி ஒன்றில் பாட்டுப்போட்டிக்கு நடுவராக போக வேண்டிய அனு மாலிக், அந்தப் பொறுப்பை ஏற்கிற மனநிலையில் இல்லை என்று விலகியிருக்கிறார்.
ஒரு மனுஷனை எத்தனை பேர்தான் அட்டாக் பண்றதுன்னு ஒரு அளவில்லையா?