Advertisment

மழையில் படப்பிடிப்பு நடத்தும் 'மழை பிடிக்காத மனிதன்' படக்குழு

'mazhai pidikatha manithan' movie shooting update out now

Advertisment

இயக்குநர் விஜய் மில்டன் எழுதி, இயக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துவருகிறார். இப்படம், கடந்த 2014ஆம் ஆண்டு நிர்மல் குமார் -விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாகதயாராகிவருகிறது. ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். ‘சலீம்’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் எடுக்கப்படுகிறது. இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார்.இன்ஃபினிட்டிவ் பிலிம் நிறுவனம்தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், இயக்குநர் விஜய் மில்டன் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "8வது நாளாக அடாது மழையிலும் விடாது தொடரும் படப்பிடிப்பு” என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

mazhai pidikatha manithan mega akash vijay antony vijay milton
இதையும் படியுங்கள்
Subscribe