/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/826_2.jpg)
இயக்குநர்கிஷோர் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் 'மாயோன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சிபிராஜுக்குஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தைமையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் திரையரங்குகளில் கமல்ஹாசனின் விக்ரம் படத்துடன் ஜூன் 3ம் தேதி முதல் வெளியாகும் என அறிவித்துள்ளனர். 500க்கு மேலான திரையரங்குகளில் விக்ரம் படத்துடன் மாயோன் படத்தின் ட்ரைலரும்வெளியாகிறது.
மேலும் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், "தசாவதாரம் படத்தில் கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் வசனம் பேசி இருந்த நிலையில் அவருடைய அந்த வசனத்திற்கு 14 வருடங்களுக்கு பிறகு மாயோன் படத்தில் பதில் கிடைத்திருக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.“மாயோன்” திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)