Advertisment

“இவர்கள் எல்லாம் மனிதர்களே கிடையாது” - நடிகர் மயில்சாமி காட்டம்  

mayilsamy talk about religion separation

மக்களை மதங்களின் வழியாக பிரித்து பார்ப்பவர்கள் மனிதர்களே கிடையாது என்றும், ஓட்டுக்களுக்காகஅவர்களைஏமாற்றாதீர்கள் என்றும் நடிகர் மயில்சாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.

Advertisment

சென்னையில் நடைபெற்ற ’மௌனமே குரு ஜீவனே கடவுள்’ என்ற புத்தக விழாவில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மயில்சாமி, “அனைவரும் ஒரு தாய் மக்கள். சாதி மதம் வேதம் பார்க்காமல் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். எனக்கு பீட்டர் அல்போன்ஸும்வேணும், முகமது அலியும் வேணும், ஆனந்த் ராமுவும் வேணும். ஆனால் இவர்களில்ஒருவர் வேண்டாம் என்கிறவர்களை மனிதர்களே கிடையாது. இஸ்லாமியர், கிறிஸ்தவர், இந்து ஆகிய மூன்று மதங்களும் ஒன்றாக சேர்ந்ததுதான்நமது நாட்டின் தேசிய கொடி என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் ஓட்டுக்களுக்காக மக்களை ஏமாற்றாதீர்கள், அவர்கள் ஒருபோதும் ஏமாறமாட்டார்கள். உங்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisment

mayilsamy tamil cinema
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe