/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/250_49.jpg)
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் எஸ்.ராஜசேகர் இயக்கத்தில் மயில்சாமி மகன் அன்பு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘எமன் கட்டளை'. இதில் கதாநாயகியாக சந்திரிகா நடித்திருக்க அர்ஜுனன், ஆர்.சுந்தர்ராஜன், நளினி, சார்லி, வையாபுரி, பவர்ஸ்டார், அனு மோகன், மதன்பாபு, சங்கிலி முருகன், கராத்தே ராஜா போன்ற நடிகர்கள் நடித்திருக்கின்றனர். என்.எஸ்.கே இசையமைத்துள்ளார்.
இப்படம் குறித்து படக்குழு தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, இரு நண்பர்களின் தவறான செயலால் ஒரு பெண்ணின் திருமணமே நின்று விடுகிறது.இதனால் மணப்பெண்ணும் அவளின் தந்தையும் விஷம்குடித்து விடுகிறார்கள்.இதை அறிந்த இரு நண்பர்களில் ஒருவரான அன்பு மனம் வருந்தி அவமானத்தால் தற்கொலை செய்து எமலோகம் செல்கிறான். அங்கு எமதர்மராஜா கட்டளைப்படி உப்பை தின்னவன் தான் தண்ணீர் குடிக்கனும், அதனால் நீ தான் அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து அதுவும் 60 நாட்களுக்குள் மணமுடித்து வைக்க வேண்டும் என்று கூறுகிறான். பூலோகம் வந்த அன்பு நண்பருடன் சேர்ந்து அந்த பெண்ணுக்கு பல மாப்பிள்ளைகள் தேடி அலைகிறான்.
இதற்கிடையில் அவளது தாய்மாமனும் இவளை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். அந்த பெண் அன்பு மீது காதல் கொள்கிறான். ஆனால் அன்பு விலகி ஓடுகிறான். இவ்வேளையில் 59 நாட்கள் முடிந்து 60 வது நாளும் பிறக்கிறது. எமன் கட்டளைப்படி அப்பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்தார்களா? என்பதை நகைச்சுவையுடன் இப்படம் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் பிப்ரவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)