Advertisment

"நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பார் மயில்சாமி" - மோகன் வைத்யா எமோஷ்னல்!

Mayilsamy lives in memories - Mohan Vaidya Emotional

Advertisment

பிரபுதேவாவின் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் 'பகீரா' திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்தும், இன்னும் பல திரையுலக அனுபவங்கள் குறித்தும் நம்முடன் நடிகர் மோகன் வைத்யா பகிர்ந்துகொள்கிறார்.

இந்தியாவின் நடன சூப்பர்ஸ்டார் பிரபுதேவாவுடன் பகீரா படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு பகீரா. பிரபுதேவாவுடன் நடிக்கப் போகிறோம் என்பதைக் கேட்டவுடன் எனக்கு ஏற்பட்ட பரவசம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. நான் வேலை செய்ய வேண்டும் என்று விருப்பப்பட்ட நடிகர்களுள் பிரபுதேவா முக்கியமானவர். இந்தப் படத்தில் நான் செய்திருக்கும் கேரக்டர் நிச்சயம் பேசப்படும். பிரபுதேவாவின் திரை வாழ்க்கையில் இந்தப் படம் ஒரு மைல்கல்லாக இருக்கும். ஆரம்பத்தில் அவரோடு நடிக்க எனக்கு ஒரு பயம் இருந்தது. ஆனால் நான் அதிக டேக் வாங்கினாலும் என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தினார். அவர் அற்புதமான மனிதர்.

Advertisment

பிக் பாஸ் ஷோவுக்குள் சென்றால் வாழ்க்கையே மாறிவிடும் என்கிறார்கள். உங்களுடைய வாழ்வில் அது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது?

பிக் பாஸ் ஷோவுக்கு முன்னால் நம்மை சில லட்சம் பேருக்குத் தெரியும். அதன் பிறகு பல கோடி பேருக்கு நம்மைத் தெரிகிறது. உலகளவில் இன்று என்னை மக்கள் 'நைனா' என்று அன்போடு அழைக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பிக் பாஸ் தான். அதன் பிறகு சினிமா வாய்ப்புகளும் அதிகம் வருகின்றன. வெற்றிக்கு நம்முடைய உழைப்பும் மிக அவசியம்.

சமீபத்தில் மயில்சாமியின் இழப்பு அனைவரையும் பாதித்தது. அவர் பற்றி சில வார்த்தைகள்

மயில்சாமி மிக நல்ல மனிதர். சிவராத்திரியன்று கடவுள் அவரை அழைத்துக் கொண்டார். எப்போதும் அனைவரையும் கலகலப்பாக வைத்துக்கொள்ளும் குணம் கொண்டவர். அவர் எப்போதும் நம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பார். அவர் போல் அனைவரும் உதவிகள் செய்தால் நல்லது.

interview mayilsamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe