Advertisment

மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது

mayilsamy body was cremated

Advertisment

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வரை பெரும்பாலானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர்.

நடிகர் ரஜினி, வண்டலூர் அருகே உள்ள சிவன் கோவிலில் நான் பாலபிஷேகம் செய்ய வேண்டுமென்ற மயில்சாமியின் ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவேதாக தெரிவித்தார். நடிகர் சங்கம் சார்பில் மயில்சாமியின் குழந்தைகளை அவரது ஸ்தானத்தில் இருந்து அரவணைப்போம் என நாசர் கூறியுள்ளார்.

அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற்று முடிந்த நிலையில் அவரது உடல் வீட்டிலிருந்து வட பழனி மின் மயானம் வரை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அந்த இறுதி ஊர்வலத்தில் ஏகப்பட்ட மக்கள் திரண்டு வந்து கலந்துகொண்டனர். பின்பு வடபழனி மின் மயானத்தில் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

mayilsamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe