matt damon

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பல லட்சங்களைக் கடந்துள்ளது. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா பெரும் இழப்பைக் கரோனாவால் சந்தித்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் 14 லட்சத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80,000 பேர் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க அரசு, இதைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திண்டாடி வருகிறது.

Advertisment

'போர்ன்' சீரிஸ் படங்களின் கதாநாயகன் மேட் டேமனின் மகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தி லாஸ்ட் டூயல் என்ற படத்தின் ஷூட்டிங் அயர்லாந்து நாட்டில் நடைபெற்றதற்காக தனது குடும்பத்துடன் சென்றிருந்தார் மேட் டேமன். இதனைத் தொடர்ந்து கரோனா அச்சுறுத்தலால் அயர்லாந்தைவிட்டு மேட் டேமனால் அமெரிக்கா திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், மேட் டேமனின் மகளான அலெக்ஸியா மட்டும் அயர்லாந்து செல்லாமல் நியூயார்க்கிலேயே இருந்துள்ளார். இதனால் அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Advertisment

இதுகுறித்து மேட் டேமன் தெரிவிக்கையில், “எனது மகள் அலெக்ஸியா நியூயார்க் நகரில் இருக்கிறார். அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவரது அறைத்தோழிகளின் உதவியால் தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார்.

இந்த மாத இறுதியில் நாங்கள் மீண்டும் அவரோடு இணைவோம். நாங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறோம். என் அம்மாவும், என் மனைவியின் அம்மாவும் கூட நன்றாக இருக்கிறார்கள். இந்த வைரஸ் முதியவர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலானது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment