mandra bedi

பிரபல பாலிவுட் நடிகை மந்த்ரா பேடி. திரைப்பட நடிகை என்பதைத் தாண்டி சின்னத்திரை நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர் என இவருக்குப் பல முகங்கள் உண்டு. தமிழில் சிம்புவோடு 'மன்மதன்' படத்தில் மனநல மருத்துவராக நடித்துள்ளார். பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ-வில் வில்லியாகவும் தோன்றினார்.

Advertisment

மந்த்ரா பேடிக்கும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ராஜ் கவுசலுக்கும் திருமணமாகி, 'வீர்' என்ற ஒன்பது வயது மகனும் உள்ளார். இந்நிலையில் தற்போது மந்த்ரா பேடி, நான்கு வயது பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளார். அக்குழந்தைக்குத் 'தாரா பேடிகவுசல்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

மந்த்ரா பேடியும் அவரது குடும்பத்தினரும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "ஒரு ஆசிர்வாதம் போல் எங்களிடம் வந்து இருக்கிறாள் குட்டிப்பெண் தாரா. வீரின் தங்கையான அவளுக்கு நான்கு வயது, அவளின் கண்கள் நட்சத்திரத்தைப் போல் மின்னுகிறது. திறந்த கைகளோடும் தூய அன்போடும் அவளை வீட்டுக்கு வரவேற்கிறோம். ஆசிர்வதிக்கபட்டதாக உணர்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ரசிகர்களும் பிரபலங்களும் மந்த்ரா பேடிக்கும் அவரது குடும்பத்திற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.