விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆன்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் சென்னை, டெல்லி, ஷிமோகா உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் செய்யப்பட்டு தற்போது நெய்வேலி சுரங்கத்தில் ஷூட் செய்யப்பட்டு வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அண்மையில் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்காக நெய்வேலி படபிடிப்பு தளத்திலிருந்த விஜய்யை சென்னை அழைத்து வந்தனர். இது தமிழகத்தில் அவர்கள் ரசிகர்கள் மத்தியிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுக, பாஜகவின் வேலைதான் இது என்று பலரும் விமர்சித்தனர். இதன்பின் நெய்வேலியில் நடைபெறும் படபிடிப்பில் மீண்டும் கலந்துகொண்ட விஜய்யை பார்க்க திரளான ரசிகர்கள் கூட்டமும் மக்களும் வந்தனர். இதனால் போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டம் சேர்ந்த மக்களை கலைத்தனர். தன்னை காண வந்த ரசிகர்களையும் மக்களையும் பார்ப்பதற்காக வேன் மேலே ஏறி நின்று செல்ஃபீ எடுத்தார் விஜய். அதை நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
நேற்று இரவும் விஜய்யை பார்க்க திரளான மக்கள் கூட்டம் கூடியது. அதனால் பேருந்தின் மேல் ஏறி மக்களுக்கு கையசைத்து நன்றி செலுத்தினார் விஜய். இந்நிலையில் ஷூட்டிங் விரைவில் முடிக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதால் இறுதி கட்ட பணிகளை படக்குழு தொடங்கும் என சொல்லப்படுகிறது.
தற்போது படக்குழு என்ன நண்பா ரெடியா என்று பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. மேலும் அதனுடன் மாஸ்டர் அப்டேட் என குறிப்பிட்டுள்ளது. மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது என்பதை அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.