vijay

Advertisment

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலையொட்டி வெளியான படம் 'மாஸ்டர்'. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் திரையரங்குகள் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. இப்படத்திற்கு, தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து ‘மாஸ்டர்’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில், ‘மாஸ்டர்’ படத்தின் தெலுங்கு உரிமையைக் கைப்பற்றிய விநியோகஸ்தர் மகேஷ் கொனேரு, நடிகர் விஜய்யைநேற்று (21.01.2021) சந்தித்தார். படத்தின் தெலுங்கு வெளியீட்டிற்குநல்ல லாபம் கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஈஸ்ட் கோஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் குழு, ‘மாஸ்டர்’ தெலுங்கு பதிப்பின் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் சார்பாக நடிகர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்தேன். தெலுங்கு மாநிலத் திரைப்பட ரசிகர்களால் காட்டப்பட்டுள்ளஅன்பைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த விஜய் அவர்கள், தெலுங்கு ரசிகர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மகேஷ் கொனேரு இணை தயாரிப்பாளர் லலித்குமாரையும் சந்தித்தார்.