/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/44_16.jpg)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கைதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணைந்துள்ளது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பணிகள் முன்னரே நிறைவடைந்துவிட்டாலும், கரோனா நெருக்கடி காரணமாகத் திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், தியேட்டர்கள் திறப்பதற்கு அரசு அனுமதியளித்ததையடுத்து, படத்தை பொங்கலுக்குத் திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, தீபாவளியன்று படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. டீசர் வெளியாகி ஒரு மாதத்தினைக் கடந்த நிலையில், 5 லட்சம் பேரால் கமெண்ட்ஸ் செய்யப்பட்ட டீசர் என்ற மைல்கல்லை மாஸ்டர் டீசர் இன்று எட்டியுள்ளது . இதனையடுத்து உற்சாகமான விஜய் ரசிகர்கள், காலை முதலே இத்தகவலை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)