மாஸ்டர் படக்குழு கொடுத்த அப்டேட்... உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

master

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கைதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணைந்துள்ளது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பணிகள் முன்னரே நிறைவடைந்துவிட்டாலும், கரோனா நெருக்கடி காரணமாகத் திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், தியேட்டர்கள் திறப்பதற்கு அரசு அனுமதியளித்ததையடுத்து, படத்தை விரைவில் திரைக்குக் கொண்டுவர படக்குழுத் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், படம் தொடர்பாக படக்குழுவிடம் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாளை நண்பகல் 12 மணிக்கு படம் தொடர்பான அப்டேட் வெளியாகும் என்றும் அதற்காக ரசிகர்கள் தயாராக இருக்கும்படியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

master
இதையும் படியுங்கள்
Subscribe