Skip to main content

அடுத்த சாங்குக்கு ரெடியா...? மாஸ்டர் புதிய அப்டேட்! 

Published on 12/08/2020 | Edited on 12/08/2020
kgg

 

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. 'பேட்ட' புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

இந்த படத்தின் ஷூட்டிங் முடிக்கப்பட்டு ரிலீஸுக்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா காரணமாக மாஸ்டர் பட வெளியீடு தள்ளவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாஸ்டர் பட பாடல்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வைரலான நிலையில் இப்படத்திலிருந்து அடுத்ததாக 'குய்ட் பண்ணுடா' என்ற பாடலை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் விஜய்யுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

Lokesh Kanagaraj reunites with Vijay in next movie

 

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய்  'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.  செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தைப் பிரபல சன் பிக்சர்ஸ்  நிறுவனம் தயாரிக்கிறது.  'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

இப்படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார் . இப்படத்தை  தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

 

இந்நிலையில் 'விஜய் 67' வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணி  இணையவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 'விஜய் 67' படத்தை பிரபல தயாரிப்பாளர்  கலைப்புலி  எஸ் தாணு தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Next Story

‘மாஸ்டர்’ பாடல் தொட்ட மைல்கல்!

Published on 28/04/2021 | Edited on 28/04/2021

 

vijay

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருந்த ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் தினத்தையொட்டி வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்றது. படம் வெளியாவதற்கு முன்பே அனிருத் இசையில் உருவான பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

 

‘மாஸ்டர்’ பாடல்களின் உரிமையைக் கைவசம் வைத்துள்ள சோனி நிறுவனம், பட வெளியீட்டிற்குப் பின் ஒவ்வொரு பாடலாக யூ-டியூப் தளத்தில் பதிவேற்றி வந்தது. அந்த வகையில், ‘வாத்தி கம்மிங்...’ என்ற பாடல், கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ‘வாத்தி கம்மிங்’ பாடல் தற்போது உலகம் முழுவதும் 150 மில்லியன் மக்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. பாடல் வெளியாகி 3 மாதங்களிலேயே 150 மில்லியன் என்ற மைல்கல்லை ‘வாத்தி கம்மிங்’ பாடல் தொட்டது விஜய் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.