/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/master-team.jpg)
பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடித்துள்ள அடுத்த படம் மாஸ்டர். இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
அனிருத் இசையமைக்க, விஜய்யுடன் விஜய்சேதுபதி, ஷாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்ட நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகுவதாக இருந்த மாஸ்டர் திரைப்படம் கரோனா ஊரடங்கால்ஒத்திவைக்கப்பட்டது. திரையரங்குகள் எப்போது திறக்கப்படுமோ அதுவரை மாஸ்டர் படம் வேறு எந்த ஓடிடியில் வெளியிடப்போவதில்லை என்று படக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ஷுட்டிங்கின்போது, படத்தில் ஜெயில் காஸ்டியூம் கெட்டப்பில் இருக்கும் இளம் நடிகர்களுடன் அதே காஸ்டியூமில் இயக்குனர் புகைப்பட்டம் எடுத்திருப்பது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. படத்தின் ஒரு சின்ன காட்சியில் இயக்குனர் நடித்திருப்பார் என்று சொல்லப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)