பிகில் படத்தை தொடர்ந்து விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட் செய்யப்பட்டு தற்போது கர்நாடகாவில் சிமோகா மத்திய சிறையில் ஷூட் செய்யப்பட்டு வருகிறது.

vijay sethupathi

Advertisment

Advertisment

டிசம்பர் தொடக்கத்திலிருந்து இந்த பகுதியில் ஷூட்டிங்கை தொடங்கியுள்ள படக்குழு அடுத்த மாதம் வரை ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் சிமோகாவில்தான் ஷூட் செய்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உலகளவில் ட்ரெண்டாகி வைரலானது. தளபதி 64 என்று சொல்லப்பட்டு வந்த இப்படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது லுக், அதாவது விஜய் சேதுபதி இருக்கும் போஸ்டர் வருகிற ஜனவரி 16ஆம் தேதி வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று விஜய் சேதுபதி பிறந்தநாள் என்பதால் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக்கை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.