லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Advertisment

master

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் கடந்த மாதமே முடிக்கப்பட்டு ரிலீஸுக்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கொரோனா பீதி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மாஸ்டர் படம் திட்டமிட்ட படி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் மாதம் 9ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாஸ்டர் படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.