Advertisment

மாஸ்டர் ரிலீஸ் தேதியில் புதிய மாற்றம்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Advertisment

vsv

இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுவதும் கடந்த மாதமே முடிக்கப்பட்டு ரிலீஸுக்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கரோனா பீதி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மாஸ்டர் படம் திட்டமிட்ட படி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாஸ்டர் படம் முதலில் ஏப்ரல் மாதம் 9ந் தேதி மற்றும் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதால் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மற்றும் லலித் குமார் ஆகியோர் சமீபத்தில் தளபதி விஜய்யை சந்தித்து மாஸ்டர் பட வெளியீட்டு தேதி குறித்து ஆலோசனை செய்ததாகவும், இதனையடுத்து விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்கு விஜய் ஒப்புக்கொண்டதாகவும் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

master master film
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe