Advertisment

'மாஸ்டர்' பட ரிலீஸ் தேதி தீபாவளிக்கு மாற்றப்பட்டதா..? 

gd

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. 'பேட்ட' புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுவதும் கடந்த மாதமே முடிக்கப்பட்டு ரிலீஸுக்கான இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மாஸ்டர் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்கு விஜய் ஒப்புக்கொண்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பது இன்னமும் உறுதி ஆகாததாலும், அப்படியே தற்போது திறந்தாலும், தமிழக அரசு பல்வேறு நடைமுறைகளை பின்பற்றச் சொல்லி அறிவுறுத்தும் என்பதால், மக்கள் திரையரங்குகளுக்குக் கூட்டமாக வருவார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. எனவே விஜய் பிறந்தநாள் அன்று ஒரு போஸ்டர் மட்டும் ரிலீஸ் செய்துவிட்டு, மாஸ்டர் படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு தற்போது திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தின் ரிலீசுக்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

master master film
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe