Advertisment

மாஸ்டர் தயாரிப்பில் திடீர் மாற்றம்!

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட் செய்யப்பட்டு தற்போது கர்நாடகாவில் சிமோகா மத்திய சிறையில் ஷூட் செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

thalapathy 64

டிசம்பர் தொடக்கத்திலிருந்து இந்த பகுதியில் ஷூட்டிங்கை தொடங்கியுள்ள படக்குழு ஜனவரி மாத இறுதி வரை ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் சிமோகாவில்தான் எடுக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. தளபதி 64 என்று சொல்லப்பட்டு வந்த இப்படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்.பி. கிரியேஷன்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை செவன் ஸ்கிரீன்ஸ் லலித் குமார் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிர்வாகத்தை சேர்ந்தவர்கள்தான் ஷூட்டிங்கில் முழு நிர்வாகத்தையும் பார்த்துக் கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Advertisment

சினிமா வட்டாரங்களில் எக்ஸ் பி கிரியேஷன்ஸ் நிறுவனத்திடம் இருந்து இப்படம் செவன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிற்கு கை மாற்றப்பட்டுவிட்டதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

இந்த செவன் ஸ்கிரீன்ஸ் தயாரிப்பு நிறுவனம்தான் விக்ரமை வைத்து கோப்ரா என்றொரு படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

master
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe